பாடம்-1
ஆங்கில தட்டச்சு பலகையில் தட்டச்சு பழகுவதை போன்றே தமிழிலும் பின்பற்றி
விசைப்பலகையினை இயக்கலாம். ஆங்கில தட்டச்சு பலகை கீழே உள்ளவாறு இருக்கும்.
தமிழ் தட்டச்சு பலகை கீழ் கண்டவாறு இருக்கும்.
தமிழ் டைப்ரைட்டர் |
தட்டச்சு
பலகையில் உள்ள விசைகள் சித்ரா எழுத்துரு வடிவில் இருக்கும். தட்டச்சு
பலகையில் ஒவ்வொரு விசையிலும் இடமிருந்து வலமாக (Left to Right) கீழ்
கண்டவாறு விரல்களை சரியாக வைக்க வேண்டும்.
- ய (A) - இடது கை சுண்டு விரல்
- ள (S) - இடது கை மோதிர விரல்
- ன (D) - இடது கை பாம்பு விரல்
- க (F) - இடது கை சுட்டு விரல்
- ப (G) - இடது கை சுட்டு விரலை பயன்படுத்தி ப எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் க எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.
- ;(;) - வலது கை சுண்டு விரல்
- ட (L) - வலது கை மோதிர விரல்
- ம (K) - வலது கை பாம்பு விரல்
- த (J) - வலது கை சுட்டு விரல்
- h (H)- வலது கை சுட்டு விரலை பயன்படுத்தி h எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் த எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.
-
இடது கை கட்டை விரலை பயன்படுத்தி இடைவெளி விசையை (Space Bar) இயக்க வேண்டும்.அந்தந்த விசையில் விரல்களை சரியாக வைத்துக்கொண்டு இயக்க ஆரம்பிக்கவும்.ய ள ன க ட் ம தய ள ன க விசையை தட்டச்சு செய்து முடித்தவுடன் இரண்டு முறை இடைவெளி விசையை இயக்கி விட்டு ட் ம த h இயக்க வேண்டும்.ஐந்து ஐந்து முறை தட்டச்சு செய்தவுடன் இரண்டு முறை scrolling அல்லது enter செய்யவேண்டும்.இந்த பயிற்சியை 100 முறை தட்டச்சு செய்ய வேண்டும். தட்டச்சு செய்யும் பொழுது விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்ய வேண்டும். அப்பொழுது தான் வேகமாக தட்டச்சு செய்து பழக முடியும்.வாழ்த்துக்கள்!!!
Comments
Post a Comment