தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழக அரசின் கருவூல விதிகளின் அடிப்படையில் ஊதியம் பெற்று வருகின்றனர். புதிதாக ஒரு ஊழியர் பணி நியமனம் ஆகும் பொழுதும், வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கும் போதும், பதவி உயர்வு வழங்கும்போதும் ஒவொரு முறையும் ஊதிய விதி அட்டவணையை கருத்தில் கொள்ளவேண்டும். பல அரசு அலுவலகங்களில், 2017ம் ஆண்டுக்குரிய ஊதிய விதி அட்டவணையே பராமரிக்கப்பட்டு வருகின்றது. இணையதளங்களிலும் 2017ம் ஆண்டுக்குரிய ஊதிய விதி அட்டவணையே கிடைக்கப்பெறுகின்றது. 2021ம் ஆண்டுக்குரிய திருத்திய ஊதிய அட்டவணையை தங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன். PB Level மாறுதல்கள் இதில் காணப்படுகின்றது. அரசு ஊழியர்கள், கருவூல நிர்வாகிகள் இந்த அட்டவணையை பயன்படுத்துவதோடு நில்லாமல் சகா ஊழியர்களுக்கும் தெரியப்படுத்தவும். தமிழக அரசின் திருத்திய ஊதிய விதி அட்டவணையை தரவிறக்க கீழே கிளிக் செய்யவும். TN Revised Pay matrix G.O. 2021
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் 12 இளமறிவியல் பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன . 2022- ஆம் கல்வி ஆண்டின் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள வழி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க 28.06.2022 முதல் 20.08.2022 வரை வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தது . இந்த கல்வி ஆண்டில் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான மொத்த ம் 6980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன .