Skip to main content

Posts

Showing posts from July, 2016

பாடம் - 4

 பாடம்-3க்கான  பயிற்சியை முடித்தவுடன் பாடம்-4க்கான  பயிற்சியை ஆரம்பிக்கலாம். பாடம்-4ல்  நாம் பார்க்கவிருப்பது இதற்கு முந்தய படங்களில் நாம் பார்த்த அதே விசைகளின் வரிசையில் உள்ள ஒரு புதிய விசை. ய ள ன க ப  h ட் ம த - இது முந்தய படங்களில் நாம் மேற்கொண்ட விசை                                                            பயிற்சிகள். இந்த பாடத்தில் நாம் பயிற்சி பெற போகும் விசை ங - விசை. ங விசையை இயக்க விசைப்பலகையில் ' எனும் விசையை இயக்க வேண்டும். வலது காய் சுண்டு விரலை பயன்படுத்தி வலது புறமாக ஒரு விசை அளவு நகர்த்தி ங விசையை இயக்கி விட்டு மீண்டும் பழைய நிலைக்கு விரலை கொண்டு வந்து விட வேண்டும். இப்பொழுது கீழ் கண்டவாறு பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். ய ள ன க  ங ட் ம த இப்பயிற்சியை 50 முறைக்கு மேல் பிழையில்லாமல் தட்டச்சு செய்ய வேண்டும்.  

பாடம்-3

 பாடம்-1 மற்றும்  பாடம் - 2 ஆகிய பயிற்சிகளை முடித்தவுடன் கீழ் கண்ட வார்த்தைகளை பத்து முறை பிழையில்லாமல் விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்யுங்கள்; கம்பம்  மாதம்  தாகம்  டபாய்  தாயகம்  கானகம்  பாட்டன்  மாளயம்  பம்பாய்  யாமம்  கள்ளன் தாயம்  கடமான்  கப்பம்  பட்டம்  தத்தம்  பள்ளம்  மக்கள்  கட்டம்  கபம்  மகன்  பயன்  தாளம்  கானம்  மாயம்  பாடம்  மாடம்  கடகம்  கமகம  களம்  கனம்  மகம்  கடன்  மேடம்  கதர்  காய்  கட்டடம்  கர்த்தா  காளான்  டாக்டர்  காப்பகம்  பட்டாளம்  கட்டாயம்  பக்கமாய்  பக்தனாய்  மட்டமாய்  காட்டான்  பார்த்தான்  தார்ப்பாய்  காப்பாளர்   மேலே உள்ள 50 வார்த்தைகளையும் பிழையில்லாமல் சரியாக தட்டச்சு செய்து பழகுங்கள். பிழைகள் அதிகம் வரும் வார்த்தைகளை மீண்டும் பிழையில்லாமல் தட்டச்சு செய்து பழகும் வரை பயிற்சி செய்யுங்கள்.

பாடம் - 2

முதல் பாடத்தை தட்டச்சு செய்து பயிற்சி பெற்றவுடன் அதை தொடர்ந்து இரண்டாவது பாடத்தை பயிற்சி பெற தொடரலாம். ய ள ன க ப  h ட் ம த  முதல் பாடத்தில்  ய ள ன க ட ம த பயிற்சியை பின்பற்றியிருப்போம். இப்பொழுது அதே வரிசையில்  ய ள ன க-வை  தொடர்ந்து இடது கை சுட்டு விரலை பயன்படுத்தி - "ப (G)" எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் க எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும். அதே போல ட் ம த தட்டச்சு செய்து விட்டு வலது  கை சுட்டு விரலை பயன்படுத்தி h எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் த எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.  இந்த பயிற்சியை 100 முறை தட்டச்சு செய்ய வேண்டும். தட்டச்சு செய்யும் பொழுது விசைப்பலகையை பார்க்காமல் தட்டச்சு செய்ய வேண்டும். அப்பொழுது தான் வேகமாக தட்டச்சு செய்து பழக முடியும். வாழ்த்துக்கள்....  

தமிழ் தட்டச்சு

பாடம்-1         ஆங்கில தட்டச்சு பலகையில் தட்டச்சு பழகுவதை போன்றே தமிழிலும் பின்பற்றி விசைப்பலகையினை இயக்கலாம். ஆங்கில தட்டச்சு பலகை கீழே உள்ளவாறு இருக்கும்.      தமிழ் தட்டச்சு பலகை கீழ் கண்டவாறு இருக்கும். தமிழ் டைப்ரைட்டர் தட்டச்சு பலகையில் உள்ள விசைகள் சித்ரா எழுத்துரு வடிவில் இருக்கும். தட்டச்சு பலகையில் ஒவ்வொரு விசையிலும் இடமிருந்து வலமாக (Left to Right) கீழ் கண்டவாறு விரல்களை சரியாக வைக்க வேண்டும். ய (A) - இடது கை சுண்டு விரல்  ள (S) - இடது கை மோதிர  விரல்  ன (D) - இடது கை பாம்பு விரல்  க (F) - இடது கை சுட்டு விரல்  ப (G) - இடது கை சுட்டு விரலை பயன்படுத்தி ப எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் க எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.      ; (;) - வலது கை சுண்டு விரல் ட (L) - வலது கை மோதிர விரல்  ம (K) - வலது கை பாம்பு விரல்  த (J) - வலது கை சுட்டு விரல்   h (H) - வலது  கை சுட்டு விரலை பயன்படுத்தி h எழுத்தை இயக்கிவிட்டு திரும்பவும் த எழுத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும்.  இடது கை கட்டை விரலை பயன்படுத்தி இடைவெளி விசையை (Space Bar) இ